ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே புங்கனூர் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் வரதம்மாள், 98. இவர் கடந்த, 18ல் இறந்தார்.

உறவினர்கள் வர தாமதமானதால், அவரது இறுதி சடங்கு நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு நடந்தது. இதற்காக பொது மக்கள், உறவினர்கள் சடலத்தை எடுத்துக் கொண்டு மயானத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது சிலர், ராக்கெட் பட்டாசுகளை வெடித்தபடி சென்றனர். இதில் ஒரு ராக்கெட், அங்கிருந்த அரச மரத்தில் கட்டியிருந்த தேன் கூட்டின் மீது பட்டு உடைந்தது. 

ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான தேனீக்கள், சவ ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை துரத்தி துரத்தி கொட்டியது. இதனால் சடலத்தை அங்கேயே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். இதில், 42 பேர் படுகாயமடைந்தனர். அதில் ஐந்து பேர் காவனூர் அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மயானத்திற்கு செல்லும் சாலையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டு, உறவினர்கள் நேற்று அடக்கம் செய்தனர். திமிரி போலீசார் விசாரிக்கின்றனர்.