வாலாஜா வ உ சி தெருவை சேர்ந்தவர் தினேஷ் குமார் ( 33 ). இவர் கடந்த 6 ம்தேதி வீட்டில் இருந்து அரசு பஸ்சில் வேலூர் சென்றார். 
ரத்தினகிரி மேம் பாலத்தின் மீது பஸ் சென்றபோது பின்பக்க டயர் திடீரென வெடித்துள்ளது. அப்போது டயரின் மேல் பகுதி பிளைவுட் உடைந்து பள்ளம் ஏற்பட்டத்தில் அங்கு அமர்ந்திருந்த தினேஷ்குமாரின் கால் பள்ளத்தில் சிக்கி அவரது இடதுகாலில் முறிவு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ரத்தினகிரி போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் எஸ்ஐ ரமேஷ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார் .