ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ( பொறுப்பு ) பார்த்தசாரதி உத்தரவின்பேரில் எஸ்ஐக்கள் சேகர், ஜான்சேவியர் மற்றும் போலீசார் சிப்காட் வஉசி நகர் 6 வது தெருவில் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அங்குள்ள இடத்தில் காட்டன் சூதாடியவரை பிடித்து விசாரித்தனர். அதில், அதே தெருவை சேர்ந்த பரிமளமுத்து ( 57 ) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து ₹ 1,500 பறிமுதல் செய்தனர். 

அதேபோல் தெங்கால் மெய்ட்னரோடு புளியங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் ( 41 ). இவர் தெங்கால் சாலையில் நேற்று முன்தினம் போக்குவரத்துக்கும் , பொதுமக்களுக்கும் இடையூறு செய்து கொண்டிருந்தார் . இதைக்கண்ட போலீசார் , விஜயகு மாரை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர் . ஆனால் அவர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர்.