ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத்தில் விபத்தில் இறந்த பஸ் கண்டக்டர் குடும்பத்திற்கு ரூபாய் 40 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி தீர்ப்பு.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (45) இவர் அரசு பஸ் கண்டக்டர் விவசாயமும் செய்து வருகிறார் இந்நிலையில் கடந்த 2019 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் டிராக்டர் ஒன்றில் விவசாய பொருட்களை ஏற்றிக்கொண்டு ட்ரைவர் ஓட்ட இவர் உட்கார்ந்து கொண்டு வந்தார் அப்போது எதிரில் வந்த கார் மீது மோதியதில் நந்தகுமார் படுகாயமடைந்தார். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்நிலையில் நந்தகுமார் குடும்பத்தினர் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விபத்து ஏற்படுத்திய காரின் எஸ்பிஐ இன்சூரன்ஸ் மீது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர் ராணிப்பேட்டை மாவட்ட சார்பு மற்றும் துணை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது இந்நிலையில் நேற்று நடந்த லோக் அதாலத்தில் இந்த வழக்கை எடுத்துக் கொள்ளப்பட்டது நீதிபதி விசாரித்தார் வக்கீல்கள் துளசிமணி செல்வம். திருநாவுக்கரசு இன்சூரன்ஸ் அதிகாரிகள் பாலாஜி கார்த்திக் ஆகியோர் விசாரணையின் பங்கேற்றனர் அப்போது இரண்டு தரப்பினரும் ரூபாய் 40 லட்சம் இழப்பீட்டுக்கு கொண்டனர்.

இதனையடுத்து நந்தகுமாரின் மனைவி சரிதாவிடம் இழப்பீடு தொகையை வழங்க நீதிபதி ரேவதி உத்தரவிட்டார்