இட்லி யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் சுட சுட இட்லியில் சாம்பார், சட்னி போட்டுக் காலையில் சாப்பிட்டால் அப்படியிருக்கும். ஆனால் ஈரோட்டில் இன்னும் ஒரு ஸ்பெஷலாக 2 இட்லி வெறும் 3.50 ரூபாய்க்கு விற்கப்படுவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
இந்த விஷயத்தை RPG எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஹர்ஷ் கோயங்கா இந்தியா முழுக்க ஏன் உலகம் முழுக்கத் தனது டிவீட் மூலம் பிரபலப்படுத்தியுள்ளார்.
There is an ‘Idli Market’ in Erode, Tamil Nadu where they sell 20000 idlis daily. Two idlis here cost Rs 3.50 and if you include sambar/chutney then it costs Rs 6.50. India is an interesting country where a cup of Starbucks coffee costs Rs 250 and two yummy idlis cost Rs3.50! pic.twitter.com/UjRNRwJkLg— Harsh Goenka (@hvgoenka) September 1, 2021
ஈரோடு கருங்கல்பாளையம் இட்லி
ஈரோட்டில் பல விஷயங்கள் பிரபலமாக இருந்தாலும் சமீபத்தில் யூடியூப் மற்றும் சமுக வலைதளத்தில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் இயங்கி வரும் இட்லி மார்கெட் பற்றிய தகவல் காட்டுதீ போல் பரவி வருகிறது. இந்தச் செய்தி இந்தியாவின் முன்னணி வர்த்தகத் தலைவர்களில் ஒருவரான ஹர்ஷ் கோயங்கா கண்ணில் பட்டு உள்ளது.
ஹர்ஷ் கோயங்கா இட்லி டிவீட்
ஹர்ஷ் கோயங்கா ஈரோடு இட்லி மார்கெட் புகைப்படத்தைப் பதிவிட்டு, தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோட்டில் இரண்டு இட்லி வெறும் 3.50 ரூபாய்க்கும், சாமார் - சட்னி உடன் சேர்த்து 6.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது என டிவீட் செய்திருந்தார். இந்த டிவீட் தான் தற்போது நாடு முழுவதும் அனைவராலும் வியந்து பார்ப்பது மட்டும் அல்லாமல் பல்வேறு கருத்துகளை உருவாக்கி வருகிறது.
இட்லி மார்கெட்
இந்தப் பதிவில் ஹர்ஷ் கோயங்கா ஈரோட்டில் இருக்கும் இட்லி மார்கெட் பகுதியில் தினமும் 20,000 இட்லி விற்பனை செய்யப்படுகிறது. இதே இந்தியாவில் தான் ஒரு கப் ஸ்டார்பக்ஸ் காஃபி 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது எனவும் டிவீட் செய்துள்ளார். இந்த டிவீட்டில் ஹர்ஷ் கோயங்கா இந்தியாவில் இருக்கும் விலை வித்தியாசத்தைக் குறித்துப் பேசியுள்ளார்.
இதற்குப் பலரும் அதிரடியான பதில்களைத் தெரிவித்துள்ளனர்.
வசந்த பவன், சரவண பவன்
வசந்த பவன், சரவண பவன், அடையார் ஆனந்த பவனில் 10 ரூபாயாக்கு விற்க சொல்லுங்கள், 2019ல் 35 ரூபாயக்கு விற்பனை செய்யப்பட்ட 2 இட்லி தற்போது 55 ரூபாய்க்கும் அதிகமாக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை வில்லிவாக்கம் பகுதியில் பில்டர் காப்பி 5 ரூபாய்க்கும், இட்லி 3 ரூபாய்க்கும், வடை 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது என ஒருவர் டிவீட் செய்துள்ளார்..
ஹல்திராம்ஸ் கடை
இன்னொருவர் ஹல்திராம்ஸ் கடையில் ஒரு பிளேட் இட்லி, சாம்பார் சட்னி உடன் வெறும் 130 ரூபாய்க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது. அடேங்கப்பா எவ்வளவு லாபம், டயர் வர்த்தகத்தை விடவும் அதிகப்படியான லாபம் இதில் உள்ளது என டிவீட் செய்துள்ளார்.
இட்லியும் ஸ்டார்பக்ஸ்-ம்
கார்த்திகேயன் என்பவர் இட்லியும் ஸ்டார்பக்ஸ் காஃபியும் எப்படி ஒப்பிட முடியும், இதே இட்லி ஸ்டார்பக்ஸ் போன்ற இடத்தில் விற்பனை செய்யப்பட்டால் குறைந்தது 120 ரூபாய் இருக்கும். இந்த வித்தியாசம் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.