ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பீமா கோரேகான் வழக்கில் சிறைப்பிடித்தபட்டோரை விடுதலை செய் , ஊபா சட்டத்தை திரும்பப்பெறு , என வலியுறுத்தி பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட விடுதலை இயக்கம் சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில் ஒருங்கிணைப்பாளர் தா.வெங்கடேசன் தலைமை தாங்கினார் மேலும் இதில் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தயாநிதி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ் ரமேஷ் கர்ணா, வஞ்சித் பகுஜன் அகாடி, ரவி சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர. 

உலக ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு தினமான நேற்று பண்பாட்டு முற்போக்கு அமைப்புகள் ஒன்றிணைந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் இதில் எல் சி மணி நிலவு குப்புசாமி, பால் சத்தியம், வேதநாயகி சுகிர்தராணி, ராஜா பாக்கியராஜ் மட்டும் 10க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.