வாலாஜாவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால்வாய் தூர்வாரும் பணிநடந்தது. 

வாலாஜா : வடகிழக்கு பருவமழை எதிரொலியாக வாலாஜாவில் மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரும் பணி நேற்று நடந்தது.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் , வடகிழக்கு பருவமழை எதிரொலியாக கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரும் பணிநடந்து வருகிறது. அதன்படி, வாலாஜா சோளிங்கர் சாலை, செட்டித்தாங்கல், கொடைக்கல், ரெண்டாடி, வாணாபாடி சாலை, பொன்னை- கத்தாரிக்குப்பம் செல்லும் சாலையில் உள்ள மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரும் பணி நேற்று நடந்தது. 

கோட்ட பொறியாளர் லோகநாதன் உத்தரவின்பேரில் வாலாஜா உதவி கோட்ட பொறியாளர் பாலாஜி சிங் மேற்பார்வையில் கூடுதல் (பொறுப்பு) பொறியாளர் வடிவேல் தலைமையில் நடந்த இப்பணியில் சாலை ஆய்வாளர்கள் மற்றும் 37 சாலை பணியாளர்கள் ஈடுபட்டனர். 

அப்போது , ஜேசிபி இயந்திரம் கொண்டு கால்வாய்கள் தூர்வாரப்பட்டது .