வாலாஜா டோல்கேட் விரிவாக்க பணிக்காக 236 நபர்களிடமிருந்து 2016-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலுள்ள 22 ஏக்கர் நஞ்சை, புஞ்சை, வீட்டுமனை உள்ளிட்ட நிலங்கள் கையகப் படுத்தப்பட்டது. இதற்கு ஒரு சதுர அடி நிலத்திற்கு ரூ.2,500 வழங்கப்படும் என நில கூறப்பட்டது. அதன்படி, 236 பேருக்கும் மொத்தமாக ரூ.449 கோடி வழங்க வேண்டும். ஆனால் 5 வருடங்களாகியும் இழப்பீடு தொகை வழங்காமல் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

எனவே உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சென்னசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த நில உரிமையாளர்கள், கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் கோரிக்கை மனு வழங்கினர்.