இது வேற மாதிரி!!|I phone 13 leaks tamil|Why iphone is costly tamil|Mr fact man


ஆப்பிள் ஐபோன் நிறுவனம் ஐபோன் 13 சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு வெளியிட உள்ளது. இந்நிலையில் அந்த போனின் டிசைன் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. MacOtakara வெப்சைட் என்ற தளத்தில் இந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஐபோன் 12 போலவே இந்த ஐபோன் 13 மாடலும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐபோன் 12 மாடலை காட்டிலும் 0.26 மில்லிமீட்டர் ஐபோன் 13 தடிமனாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. அது பேட்டரியின் திறன் மற்றும் ரியர் கேமராவிற்காக கொண்டு வரப்பட்ட மாற்றமாக இருக்க வாய்ப்புள்ளதாம். இந்த போனின் மெயின் கேமராவில் அல்டரா வைட் சென்சார்கள் இருக்கலாம் எனவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த மாடல் போனின் டிஸ்பிளே Refresh ரேட் 120Hz எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2022இல் வெளியாகவுள்ள ஐபோன் 14 சீரிஸ் மாடலில் டெலிபோட்டோ கேமரா இடம்பெறலாம் எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.