ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கட்டளை கிராமம் ஆதிகேசவ பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரசிம்மன் வயது 65 இவர் இன்று(02-03-2021) காலை சுமார் 10. 30 மணி அளவில் காவேரிப்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கியில் தனது வங்கி கணக்கில் உள்ள இரண்டு லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு பேங்கில் இருந்து வெளியே வந்துள்ளார்

பிறகு அவரது வங்கி அருகிலிருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு தனது ஊரான கட்டளை கிராமத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கிழே கிடந்த இந்த பத்து ரூபாய் உங்களுடையதா என்று அவரிடம் கேட்டுள்ளார் 

பிறகு வீரசிம்மன் அந்த மர்ம நபர்களை திரும்பி பார்த்து விட்டு திரும்பும்போது தனது சைக்கிளில் பையில் இருந்த ரூபாய் இரண்டு லட்சத்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் திருடு போன இடத்தில் சிசிடிவி கேமராவைக் கொண்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

காவேரிப்பாக்கம் அருகே சைக்கிளில் சென்ற முதியவரிடம் மர்மமான முறையில் பணம் காணாமல் போன விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.