நெமிலி அடுத்த கரியாகுடல் கொசஸ் தலை ஆற்றுப்பகுதியில் சிலர் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நெமிலி போலீசார் நேற்று முன்தினம் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது , ஆற்றில் மினிவேனில் மர்மநபர்கள் சிலர் மணல் ஏற்றிக்கொண்டிருந்தது தெரிந்தது. போலீசார் வருவதை கண்ட அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். 

இதையடுத்து, மினிவேனை போலீசார் பறிமுதல் செய்து தப்பியவர்களை தேடி வருகின்றனர்.