வாலாஜா பிடிஓ அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் பார்வையாளர் சாந்தா நேற்று ஆய்வு செய்தார். உடன் , ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் லோகநாயகி.
வாலாஜா பிடிஓ அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6 மற்றும் 9 ம் தேதி 2 கட்டமாக நடைபெறுகிறது.
இதை யொட்டி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . வேட்பாளர் இறுதி பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது.
அதனை தொடந்து வேட்பாளர் பெயர், சின்னங்கள் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், தேர்தல் பார்வையாளர் சாந்தா வாலாஜா பிடிஓ அலுவலகத்திற்கு நேற்று திடீரென வருகை தந்தார். அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், தேர்தல் பணியாற்றும் ஊழியர்களின் தேர்தல் பணி, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச்சாவடி மையத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் லோகநாயகி, வாலாஜா பிடிஓ சித்ரா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.