கலவை அருகே ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
ராணிப்பேட்டை மாவட்டம் உட்பட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கவுள்ளது. இந்நிலையில் கலவை அடுத்த நாகலேரி, ஊராட்சி மன்றதலைவர் பதவிக்கு கடந்த 22ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. மேலும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. 

இதில் இப்பகுதியில் 3 பேர்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில், கலவை அடுத்த நாகலேரி பகுதியில் உள் ராணி, இந்திராணி , ஆதிலட்சுமி , மங்கை ஆகி யோர் ஓட்டு சேகரித்து கொண்டு இருந்தனர். தனியார் பள்ளி தலை மையாசிரியான வேட்பாளர் இந்திராணி ( 57 ) நேற்று முன் தினம் கால்வலி காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

இதனால் அப்பகுதி மக்கள் சோகத் தில் ஆழ்ந்துள்ளனர் .