ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் 90 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரவுடிகள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஹோம்பிங் ஆபரேஷன் மூலம் ரவுடிகள் வீடுகள் மற்றும் ரவுடிகள் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
வேலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையிலான போலீசார் இரவில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ரவுடிகள் 41 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 300 இடங்களில் போலீசார் ஹோம்பிங் ஆபரேஷன் நடத்தினர். இதில் ரவுடிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரவுடிகள் 21 பேரிடம் நன்னடத்தைச் சான்றிதழ் கையெழுத்து வாங்கிவிட்டு அனுப்பியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று இரவு முதல் காலை வரை அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரவுடிகள் 42 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் 90 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரவுடிகள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.