ராணிப்பேட்டை சப்கலெக்டராக பணியாற்றி வந்த இளம்பகவத் கடந்த ஜூன் மாதம் 9 ம் தேதி தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் கூடுதல் நிர்வாக இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கும்மேலாக, ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் பணியிடம் காலியாக இருந்தது.
இந்நிலையில் , தமிழகம் முழுவதும் 12 துணை ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி முன்னாள் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி ராணிப்பேட்டை கோட்டாட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட் டுள்ளது .