ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கோவிந்தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் என்பவரின் மகன் நங்கநாதன்-48 இவரது மனைவி கங்கா 52 இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் ரங்கநாதன் சிக்கன் பக்கோடா கடை வைத்திருக்கிறார்.
இவரது பங்காளிகளான கிருஷ்ணன், அப்பா முருகேசன் ஆகிய மூன்று அண்ணன் தம்பிகளான இவர்களுக்கு 20 வருடங்களுக்கு முன்பு சுமார் 48 சென்டை மூன்று பேர் நிலத்தை பாகப்பிரிவினை செய்து தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வந்தார்கள்.

பிறகு முருகேசன் நிலத்தை தம்பியான கிருஷ்ணனுக்கு வித்துவிடுகிறார் இதன் காரணமாக முருகேசன் மகன் ரங்கநாதன் கிருஷ்ணன் -75 என்பவரின் வீட்டிற்குச் சென்று என்னுடைய அப்பா முருகேசனின் நிலத்தை தாருங்கள் என்று அவரின் வீட்டு முன்பு தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

பிறகு கிருஷ்ணன் ரங்கநாதனிடம் உனது அப்பாவின் நிலத்தை இருபது வருடங்களுக்கு முன்பு நான் அவருக்கு பாகப்பிரிவினை செய்து எழுதி கொடுத்துவிட்டேன் என்று கிருஷ்ணன் அவரிடம் கூறினார் அதற்கு இல்லை என்று மறுத்து அவரை மறுபடியும் தகாத வார்த்தையால் ரங்கநாதன் பேசியுள்ளார். 

அதன்படி இன்று காலை ரங்கநாதன் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு கிருஷ்ணன் வீட்டு முன்பு சென்று மீண்டும் தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த கிருஷ்ணனின் மகன்கள் உமேஷ்-36 அன்பு -33 கிருஷ்ணனின் மனைவி கிருஷ்ணவேணி-62 ஆகியோர் நான்கு பேரும் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த ரங்கநாதனிடம் சென்று அவரை இரும்பு ராடால் ஓங்கி அடித்துள்ளனர். 

இதில் தலையில் பலத்த காயமடைந்த ரங்கநாதன் கீழே ரத்த வெள்ளத்துடன் மயங்கி விழுந்தார் பிறகு அருகில் இருந்தவர்கள் அவரை ஆட்டோவின் மூலம் மீட்டு சோளிங்கர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் பின்னர் மேல்சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். 

பிறகு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ரங்கநாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இது சம்பந்தமாக ரங்கநாதன் மனைவி கங்கா பாணாவரம் காவல் நிலையத்தில் எனது கணவரை தாக்கி கொலை செய்த நான்கு பேர் மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

நில தகராறால் ஏற்பட்ட சண்டையால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது