கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வெங்கட்ராமனின் மகன் நரேந்திரகுமார்.இவர் நேற்று பெங்களூரிலிருந்து சென்னைக்கு அவருக்கு சொந்தமான YAMAHA இரு சக்கர வாகனத்தை ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டிக் கொண்டு வந்துள்ளார் அப்போது அவருடைய மச்சான் நரேந்ரா என்பவரை வண்டியின் பின்புறத்தில் உட்கார வைத்துக்கொண்டு வண்டி ஓட்டிக் கொண்டு வந்துள்ளார்

பிறகு ஓச்சேரி தேசிய நெடுஞ்சாலை அருகே வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்தபோது எதிர்பாராவிதமாக நாய்ஒன்று சாலையின் குறுக்கே ஒடி வந்ததால் வாகனத்தை ஓட்டி வந்த நரேந்திர குமார் யாதவ் என்பவர் நாயின் மீது மோதியதால் இருசக்கர வாகனத்தில் இருந்த இருவரும் கீழே பலத்த காயத்துடன் விழுந்தன

இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நரேந்திரகுமார்யாதவ் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் இன்று(19-09-2021) மாலை 6 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார்

இதுகுறித்து அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்