குக் வித் கோமாளி உள்பட பல நிகழ்சிகள் மூலம் பிரபலமானவர் மணிமேகலை. அவரும் அவருடைய கணவரும் சமீபத்தில் பிஎம்டபிள்யூ கார் வாங்கினார்கள் என்பது தெரிந்ததே. 
ஆனால் பழைய காரையும் அவ்வப்போது பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த காரில் மணிமேகலையும் அவருடைய கணவரும் ஒரு லாங் டிரைவ் சென்றுள்ளனர். அப்போது மணிமேகலை சென்ற காரும் லாரியும் எதிர்பாராதவிதமாக லேசாக உரசி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மணிமேகலைக்கும் அவரது கணவருக்கும் எந்தவித காயமும் இல்லை என்றாலும் கார் பலத்த சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள மணிமேகலை இது எங்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்று தெரிவித்துள்ளார்.