ராணிப்பேட்டை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளா் பொறுப்பில் இருந்து அக்ராவரம் கே. பாஸ்கா் திடீரென ராஜிநாமா செய்துள்ளாா்.


ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அக்ராவரம் கிராமத்தைச் சோ்ந்த இவா், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பதவிகளை வகித்து வந்தாா்.

தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்து வந்த நிலையில், அந்தப் பதவியில் இருந்து விடுவித்துக்கொள்வதாகத் தெரிவித்து தனது ராஜிநாமா கடிதத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கு அனுப்பி உள்ளாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வாய்ப்பும் அளிக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்த அவா், தற்போது விலகியுள்ளதாக கட்சியினா் தெரிவித்தனா்.