ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த நெமிலி உப்பரந்தங்கள் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை.

இவரது மகன் ரஜினி (எ) ஜானி -45 இவர் இன்று காலை பொன்னப்பதாங்கள் கூட்ரோட்டில் நின்று கொண்டு போக்குவரத்து மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி இடையூறு ஏற்படுத்தி வந்த ரஜினி என்கிற ஜானியை அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின்பேரில் விரைந்து வந்த போலீசார் அங்கு கலாட்டா செய்து கொண்டிருந்த ரஜினி என்கிற ஜானகியை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று அவரை விசாரணை செய்தபோது இவர் மீது ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருந்துள்ள நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன.