ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் இன்று அரக்கோணம் ரெயில் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஓம்சக்தி கோவில் பின்புறம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 8 பேர் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்ட அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்த போது 5 பேர் தப்பி ஓடிவிட்டனர். 3 பேர் பிடிபட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சென்னை தாம்பரம் அகரம்பேடு பகுதியை சேர்ந்த பூபதி என்ற கார்த்திக் (வயது 23), பெங்களூருவை சேர்ந்த தேஜேஸ்வரன் (23). அரக்கோணத்தை சேர்ந்த பிரகாஷ் (22) என்பதும் அப்பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து பணம் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து இரும்பு கம்பி, கத்தி, கடப்பாரை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார். மேலும் தப்பி ஓடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.