ஆற்காடு அருகே டாஸ்மாக் விற்பனையாளர் மீது மிளகாய் பொடி தூவி பணம் பறிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம் , ஆற்காடு அடுத்த தாமரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தனசேகர் ( 41 ) . இவர் திமிரி அடுத்த கணியனூரில் உள்ள 11231 என்ற எண் கொண்ட அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி யாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு வழக்கம்போல் டாஸ்மாக்கை மூடிவிட்டு விற்பனையான பணம் ₹ 1.50 லட்சத்தை பையில் வைத்து கொண்டு தனசேகர் தனது பைக்கில் வீடு திரும்பினார். 

டாஸ்மாக் கடையிலிருந்து சுமார் 200 அடி தூரத்தில் உள்ள செய்யாத்து வண்ணம் கூட்ட ரோடு அருகே இரவு 8.15 மணிக்கு வந்த போது இருட்டில் அங்கு பைக்கில் நின்றிருந்த 2 மர்ம நபர்கள் திடீரென மிள காய்பொடியை எடுத்து தனசேகர் முகத்தில் வீசி உள்ளனர். 

இதனையடுத்து சுதா ரித்துக்கொண்ட தனசேகர் பைக்கை வேகமாக திருப்பி மீண்டும் டாஸ் மாக் கடைக்கு சென்றுள்ளார் . அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் நடந்த சம்பவம் குறித்து தனசேகர் கூறியுள்ளார் . அதனைத் தொடர்ந்து தனசேகருடன் பொதுமக்களும் மீண்டும் செய்யாத் துவண்ணம் கூட்ரோடு வந்து பார்த்துள்ளனர். 

ஆனால் அதற்குள் அங்கிருந்த மர்ம நபர்கள் இருட்டில் தப்பி மறைத்துள்ளனர் . வழக்கமாக டாஸ்மாக்கை மூடி விட்டு அதன் விற்பனையாளர்கள் வரும் வழியை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் அவர்களிடமிருந்து பணத்தைப் பறிக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது . 

தனசேகர் சுதாரித்துக் கொண்டதால் டாஸ்மாக் பணம் 1.50 லட்சம் தப்பியது . இதுகுறித்து தனசேகர் நேற்றிரவு திமிரி போலீசில் புகார் செய்தார். 

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .