காவேரிப்பாக்கம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக வளாகத்தில் காவேரிபாக்கம் ஒன்றிய சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது 

இதில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுக தனது தேர்தல் அறிக்கையில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை நிரந்தரமாக்கி அவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அமுல்படுத்த வேண்டும் மேலும் குறைந்த பட்ச பென்சன் ரூபாய் 7850 அகவிலைப்படி உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

இந்த ஆர்ப்பாட்டத்தில் காவேரிபாக்கம் ஒன்றியத்தைச் சார்ந்த சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.