ரத்தினகிரியில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் தயாராகும் மரத்தேரை பாலமுருகனடிமை சுவாமிகள் பார்வையிட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ரத்தினகிரியில் பாலமுருகன் கோவில் உள்ளது. பாலமுருகனடிமை சுவாமிகள் கோவில் பரம்பரை அறங்காவலராக இருக்கிறார்.கோவிலுக்காக 60 லட்சம் ரூபாய் மதிப்பில் 36 அடி உயர மரத்தேர் தயாராகி வருகிறது. இந்த பணிகளை பாலமுருகனடிமை சுவாமிகள் ஆய்வு செய்து விரைவில் தேரை வடிமைக்கும்படி உத்தரவிட்டார்.