பாணாவரம் அருகே, அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பள்ளி மூடப்பட்டது. 

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே காட்டுப்பாக்கத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கடந்த, 5ல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

அதில், ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதனால், அப்பள்ளியில் இருந்த மாணவ, மாணவியர் வெளியேற்றப்பட்டனர். 

பள்ளி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு மூடப்பட்டது.