அக்டோபர் மாதத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது..

அக்டோபர் மாதம் நெருங்கிவிட்டது. எனவே அதற்கு முன் அனைத்து தனியார் மற்றும் பொது வங்கி விடுமுறை நாட்களையும் தெரிந்து கொள்வது அவசியம். அக்டோபர் மாதத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு வங்கிகள் மொத்தம் 21 நாட்களுக்கு மூடப்படும். இதுபோன்ற சூழ்நிலையில், அடுத்த மாதம் உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால், விடுமுறை நாட்களை மனதில் வைத்து உங்கள் வேலையைத் திட்டமிட வேண்டும்.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதல்களில், நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிடப்பட்ட தேதிகளில் மூடப்படும். இந்த விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக இருக்கும்.

ஆனால் குடியரசு தினம் (ஜனவரி 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), கிறிஸ்துமஸ் தினம் (டிசம்பர் 25). தீபாவளி, கிறிஸ்துமஸ், ஈத், குருநானக் ஜெயந்தி, புனித வெள்ளி உள்ளிட்ட பண்டிகைகளிலும் அனைத்து வங்கிகளும் மூடப்படும்..
கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும், ஏனெனில் இது ரிசர்வ் வங்கியால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், அக்டோபர் மாதத்தில் வங்கிகள் சுமார் 21 விடுமுறை நாட்களை எதிர்பார்க்கலாம்,

அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி, நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை நாளாகும். அக்டோபர் 15-ம் தேதி, நாடு முழுவதும்பரவலாக துர்கா பூஜை/தசரா/தசரா (விஜய தசமி) கொண்டாடப்பட உள்ளது.. எனவே அன்றைய தினம், இம்பால் மற்றும் சிம்லாவில் அமைந்துள்ள வங்கிகளைத் தவிர அனைத்து வங்கிகளுக்கும் அந்த நாளுக்கு விடுமுறை இருக்கும்.

அக்டோபர் மாதத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்கள் :

  • அக்டோபர் 1 – வங்கிக் கணக்குகளின் அரை ஆண்டு நிறைவு (கேங்டாக்)

  • அக்டோபர் 2 – மகாத்மா காந்தி ஜெயந்தி (அனைத்து மாநிலங்கள்)

  • அக்டோபர் 3 – ஞாயிறு

  • அக்டோபர் 6 – மஹாளய அமாவாசை (அகர்தலா, பெங்களூரு, கொல்கத்தா)

  • அக்டோபர் 7 – லைனிங்தோ சனமஹி (இம்பால்)

  • அக்டோபர் 9 – 2 வது சனிக்கிழமை

  • அக்டோபர் 10 – ஞாயிறு

  • அக்டோபர் 12 – துர்கா பூஜை (அகர்தலா, கொல்கத்தா)

  • அக்டோபர் 13 – துர்கா பூஜை (மகா அஷ்டமி) / (அகர்தலா, புவனேஸ்வர், காங்டாக், கவுகாத்தி, இம்பால், கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி)

  • அக்டோபர் 14 – துர்கா பூஜை/தசரா/ ஆயுத பூஜை (அகர்தலா, பெங்களூரு, சென்னை, கேங்டாக், கவுகாத்தி, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங், ஸ்ரீநகர், திருவனந்தபுரம்)

  • அக்டோபர் 15 – துர்கா பூஜை/தசரா/தசரா விஜய தசமி ( இம்பால் மற்றும் சிம்லாவை தவிர அனைத்து வங்கிகளும்)

  • அக்டோபர் 16 – துர்கா பூஜை – (கேங்டாக்)

  • அக்டோபர் 17 – ஞாயிறு

  • அக்டோபர் 18 – கதி பிஹு (கவுகாத்தி)

  • அக்டோபர் 19- மிலாடி நபி / முகமது நபியின் பிறந்த நாள் ) அகமதாபாத், பெலாப்பூர், போபால், சென்னை, டேராடூன், ஹைதராபாத், இம்பால், ஜம்மு, கான்பூர், கொச்சி , லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்பூர், ராஞ்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம்)

  • அக்டோபர் 20 – மகரிஷி வால்மீகியின் பிறந்த நாள்/லட்சுமி பூஜை (அகர்தலா, பெங்களூரு, சண்டிகர், கொல்கத்தா, சிம்லா)

  • அக்டோபர் 22-மிலாத் உல் நபி ( ஜம்மு, ஸ்ரீநகர்)

  • அக்டோபர் 23 – 4-வது சனிக்கிழமை

  • அக்டோபர் 24 – ஞாயிறு

  • அக்டோபர் 26 – சேர்க்கை நாள் (ஜம்மு, ஸ்ரீநகர்)

  • அக்டோபர் 31 – ஞாயிறு