ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
கடந்த மே 7ஆம் தேதி மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.. அதேபோல காலியாக இருக்கும் இடங்களுக்கு அதிகாரிகளை நியமித்தும் அரசு உத்தரவிட்டு வருகிறது.. இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்..

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு வெளியிட்டதாவது, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வரும் கிளாஸ்டோன் புஷ்பராஜ் திட்ட ஆணைய உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்படுவார்.. மாநில திட்ட ஆணைய உறுப்பினர் செயலராக இருக்கும் பாஸ்கர பாண்டியன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.