ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியராக டி. பாஸ்கர பாண்டியன் இன்று பொறுப்பேற்றார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மாவட்டத்தின் முதல் ஆட்சியராக திவ்யதர்ஷினி பணியாற்றிய வந்தார் பின்னர், அவர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் அவரை தொடர்ந்து, கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அவர் சென்னைக்கு மாநில திட்டக்குழு செயல் உறுப்பினராகவும் அதே பணியிலிருந்த பாஸ்கர பாண்டியன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்து அரசு அறிவித்தது. அதன் பேரில் பாஸ்கர பாண்டியன் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்

புதியதாக பொறுப்பேற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் கடந்த 2005ல் திருச்சியில் பயிற்சி துணை ஆட்சியராக பணியில் சேர்ந்தார். பிறகு, 2006ல் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியராக இருந்துள்ளார். பின்னர், மாவட்ட வழங்கல் அலுவலர். பொது மேலாளர், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், இணைஇயக்குநர், மாற்று திறனாளிகள் நலத்துறை, முதுநிலை மண்டல மேலாளர் (டாஸ்மாக்) சென்னை, பொது மேலாளர், தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல கழகம் ஆகியவற்றில் பணியாற்றி வந்துள்ளார்.   

 2013ல் நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய நிலையில் இந்திய ஆட்சிப் பணி முதுநிலை பட்டியலில் பதவி உயர்வு பெற்றார். அதனைத்தொடர்ந்து,தனி அலுவலராக முதலமைச்சர் தனிப்பிரிவு, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பின்னர், மாநில திட்டக்குழு செயல் உறுப்பினர் ஆகிய துறைகளில் பணியாற்றி வந்துள்ளார்.

முன்னதாக , பொறுப்பேற்க ஆட்சியர. அலுவலகம் வந்த அவரை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வரவேற்றார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.