பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Engineer & Supervisor ஆகிய பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டு வழிகள் மூலம் சமர்ப்பிக்கவும். எனவே தகுதி வாய்ந்தவர்கள் ஆன்லைன் மூலம் 24.09.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும். அதன் பிறகு உங்கள் விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 01.10.2021 அன்றுக்குள் அனுப்பி வைக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். திருச்சி BHEL வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Personal Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிபெற்றவர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். BHEL நிறுவனம் அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புப் பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு www.bhel.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

BHEL வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:


காலியிடங்கள் மற்றும் சம்பளம் விவரங்கள்


கல்வி தகுதி:


சம்மந்தப்பட்ட துறைகளில் இருந்து Engineering/ Diploma படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயது தகுதி:


விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 34 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.

வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:


Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:


ஆன்லைன் & ஆஃப்லைன் ஆகிய இரண்டு முறைகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில்:


bhel.com என்ற இணையதள வழியாக 24.09.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆஃப்லைனில்:


Sr. Deputy General Manager (HR) BHEL, Power Sector Eastern Region, BHEL Bhawan, Plot No. DJ- 9/1, Sector- II, Salt Lake City, Kolkata – 700091 என்ற முகவரிக்கு தங்களது ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து 01.10.2021 அன்றுக்குள் அனுப்பி வைக்கவும்.

விண்ணப்ப கட்டணம்:


SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.200/-

விண்ணப்ப கட்டணத்தை செலுத்தும் முறை:

You should make the payment via SBI Collect or by means of a Demand Draft drawn in favour of BHEL, PSER payable at Kolkata.

BHEL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

bhel.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

அவற்றில் “Career” என்பதில் “BHEL PSER needs experienced Engineers and Supervisors in Civil discipline on Fixed Tenure Appointment basis ” என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.

பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து ஆன்லைன் அல்லது அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை Print Out எடுத்துக்கொள்ளவும்.

Apply online Registration link : Click Here


Official Notification : Download Here


பொறுப்புத் துறப்பு:


மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!