வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியை சேர்ந்த முபாரக், ஜாகீர் ஆகிய சகோதரர்கள்.

நேற்று காலை சுமார் 9 மணியளவில் பாலாற்றில் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி மாயமாகினர். அவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் காட்பாடி தீயணைப்பு துறையினர் தேடி வந்த நிலையில் தற்போது 30 மணி நேரத்திற்கு பிறகு அண்ணன் முபாரக் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.

தம்பி ஜாகீர் உடலை தொடர்ந்து தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.