கலவை அடுத்த சென்னசமுத்திரம் மேட்டுரை சேர்ந்தவர் விஜயகுமார் ( 30 ), கார் மெக்கானிக். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. 
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தனக்கு நெஞ்சுவலி இருப்பதாக கூறிவந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் விஜயகுமாரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று காண்பித்தனர். அப்போது , மருத்துவர்கள் இவருக்கு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினர். 

இதையடுத்து , அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5 ம் தேதி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வழக்கம்போல் இரவு உணவு சாப்பிட்டு விஜயகுமார் உறங்க சென்றார். 

நேற்று முன்தினம் படுக்கையறையில் உள்ள பேனில் விஜயகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விஜயகு மார் மனைவி நித்தியா கலவை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், எஸ்ஐ சரவணமூர்த்தி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றார்.