இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது : 

கோயில்களில் திரு முறைகளைக் குறைவின்றி ஓதிட ஏதுவாக , மதுரை மீனாட்சி அம்மன் கோயில் , திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக ஓதுவார் பயிற்சி பள்ளி நடந்து வருகிறது . இதில் , திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . இப்பயிற்சி பெற விரும்புவோர் , இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் . தகுதி உடையர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 

3 ஆண்டுகால சான்றிதழ் படிப்பில் சேர அக்டோபர் 27 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் . இந்த பயிற்சி பள்ளியில் சேர தேர்வாகும் மாணவர்களுக்கு இலவச உணவு , இருப்பிடம் , உடை , 13 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் . 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று , 20 வயதுக்குள் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் . குரல் வளம் , உடல் வளம் உடையவர்களாக இருக்க வேண்டும் .

விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnhrce.gov.in என்கிற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபர் 27 ம் தேதிக்குள் ஓதுவார் பயிற்சி பள்ளி , இணை ஆணையர் , திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் என்கிற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் .