சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ராணிப்பேட்டை நவல்பூர் ரயில்வே மேம்பாலம் குறுகிய சாலையாக இருந்தது. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் , மேலும் சிறிய பெரிய விபத்துகளும் அடிக்கடி நடைபெற்று வந்தன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி உயிர் சேதங்களும் படுகாயங்களும் நடைபெற்று வந்தன. 
இந்நிலையில் கடந்த மாதங்களாக சென்னை மும்பை தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிகள் ஆரம்பித்து நடந்து வருகின்றன. இதில் ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டிலிருந்து நவல்பூர் வரை ₹26.65 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் துரிதப்பணிகள் நடைபெற்று வருவதால் அந்த சாலையில் இரு சக்கர நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் மாற்றுப் சிலபாதையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சார்பில் காரை கூட்ரோடு முதல் முத்துக்கடை கிருஷ்ணகிரி டிரங்க் ரோடு ரயில்வே ஸ்டேஷன் சாலை எல்.எஃப்.சி சாலை எஸ் எம்எச் மருத்துவமனை சாலைகள் போன்ற இடங்களில் புதிய சாலை பணிகளை அமைக்கப்பட்டு மாற்று பாதை வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. 

இந்நிலையில் நேற்று முன் தினம் ராணிப்பேட்டை நவல்பூர் ரயில்வே மேம்பாலத் தின் இருபுறங்களிலும் சாலைகள் புனரமைப்பு பணிகள் துவங்கப்பட்டு துரிதமாக பணிகள் ஜேசி பிக்கள் மற்றும் லாரிகள் மூலம் விறு விறுப்பாக நடை பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .