நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேரில் சென்று ஆய்வு 
கடந்த 2019இல் சீனாவில் தொடங்கிய கொரோனா நோய்தொற்று ஜனவரி 30 -2020-ல் இந்தியாவிலும் பரவத்தொடங்கியது நோய் தொற்று அதிகமானதால் கடந்த மார்ச்14- 2020 இந்திய அரசு கொரோனா நோய்தொற்று தேசிய பேரிடராக அறிவித்தது

இதனைத் தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டன அதனைத் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வந்தநிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களிலும் தமிழ்நாட்டிலும் நேற்று 01. 09. 21பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன
இதனடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன இதன் ஒரு பகுதியாக
வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் வருகை தந்ததையொட்டி பள்ளி திறக்கப்பட்ன.

இதனை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் முக கவசம் அணிந்து வகுப்பறைக்கு வந்தனர் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்பறையில் அமர்ந்தனர். இதனை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்

ஆட்சியர் ஆசிரியர்களோடு பேசும்போது அரசு தெரிவித்துள்ளவாறு கோவிட்- 19 வழிகாட்டி விதிமுறைகளை கடைபிடித்து கவனமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.