ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாணாவரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் கோரிக்கை மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது. ;
ஆற்காடு முதல் பாணாவரம் வரை இயங்கிவந்த தடம் எண் 19 அரசு பேருந்து பல வருடங்களாக இயங்கி வந்தது இப்பேருந்து ஆற்காடு முதல் காவேரிபாக்கம் பொன்னப்பன்தாங்கல் வழியாக பாணாவரம் வரை ஒரு நாளைக்கு நான்கு முறை வந்து சென்றன தற்போது பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் வந்து செல்வதற்கு வசதியாக இருந்தது இந்த பேருந்தை மீண்டும் இயக்க கோரி ஏற்கனவே சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் ஆகியோரிடம் கல்லூரி மாணவிகள் மனு அளித்தனர்.
இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை இந்நிலையில் மீண்டும் தடம் எண் 19 அரசு பேருந்தை மீண்டும் இயக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.