ராணிப்பேட்டை கலெக்டர் தகவல்

மகாத்மா காந்தி , ஜவகர்லால் நேரு பிறந்தநாளை யொட்டி பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்த உள்ளதாக ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண் டியன் தெரிவித்துள்ளார் . 

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது :


தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2021-2022ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி , ஜவகர்லால் நேரு , அண்ணல் அம்பேத்கர் , தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா , முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளில் மாவட்ட அளவில் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது . 

மகாத்மா காந்தி பிறந்தநாள்

அதன்படி , அக்டோபர் மாதம் 2 ம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளும் , நவம்பர் 14 ம் தேதி ஜவகர்லால் நேரு பிறந்த நாள் விழா நடைபெறஉள்ளது . இதையொட்டி , அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி , கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங் கப்படஉள்ளது . 

பேச்சுப் போட்டிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 2 ம் தேதி பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக பேச்சுப்போட்டிகள் நடத்தப்படும் . போட்டியில் பங்கேற்கும் 2 மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் தேர்வு செய்து அனுப்பி வைக்க வேண்டும் . போட் டியில் பங்கேற்று மாவட்ட அளவில் வெற்றி பெரும் கல்லூரிமாணவர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம் , 2 ம் பரிசு 3 ஆயிரம் , 3 ம் பரிசாக 2 ஆயிரம் வழங்கப்படும் .

பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்

அதேபோல் , பள்ளி மாணவர்களுக்கும் முதல் பரிசு 15 ஆயிரம் ,  3 ஆயிரம் , 2 ஆயிரம் பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் . மேலும் , அரசு பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசாக தலா 2 ஆயிரம் வழங்கப்படும் . இப்போட்டிகள் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள லிட்டில் பிளவர் கான்வென்ட்டில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும் . 

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது .