அரக்கோணம் அடுத்த கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த வள்ளி(36). இவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள வேடல் கிராமத்தில் இருக்கும் மகளின் வீட்டிற்கு சென்று திரும்பி வந்து வீட்டின் கதைவை திறந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீஸில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சோதனை செய்த போது வீட்டின் வாசல் கதவின் மேல் கூரை பகுதியில் உள்ள ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று பீரோவை உடைத்து இரண்டு சவரன் நகை மற்றும் இருபதாயிரம் கொள்ளையடித்து சென்றது சோதனையில் தெரிய வந்ததை அடுத்து போலீஸார் வழக்கு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.