ஷடாரண்ய தலங்களில் முதன்மை யானது வாலாஜா அடுத்த வன்னிவேடு அகஸ்தீஸ்வரர் கோயில். அகத்திய மாமுனிவர் தவமிருந்து ஈஸ்வரனை வழிபட்டதால் அகஸ்தீஸ்வரர் கோயில் என பெயர் பெற்றதது. சுமார் 1,400 ஆண்டு பழமையான இந்த கோயிலில் நித்ய பூஜைகள் மற்றும் ஞாயிறு தோறும் சரபேஸ்வரர் பூஜை செய்யப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

மேலும் , மகா சிவராத்திரியன்று ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் புதிதாக 5 நிலை கொண்ட ராஜகோபுர கட்டுமான பணி சுமார் 74 கோடி செலவில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது. பின்னர் கொரோனா பரவல் காரணமாக கோபுர பணிகள் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது . 

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கோபுர திருப்பணிகள் தொடங்கியது . இதையொட்டி கோயில் வளாகத்தில் கணபதி பூஜை செய்யப்பட்டது . தொடர்ந்து மீண்டும் கட்டிட பணிகள் தொடங்கியது . இந்த பூஜையில் வன்னிவேடு , வி.சி.மோட்டூர் , வாலாஜா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .