கலவை அடுத்த அல்லாளச்சேரி கிராமத்தில் வளையாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழு சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று முன்தினம் நடந்தது. 

இதில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மற்றும் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட பொதுமக்கள் என மொத்தம் 200 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இதனை கலவை தாசில்தார் சமீம், துணை தாசில் தார் பாஸ்கரன், ஆர்ஐ சுப்பிரமணி, கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ, விஏஓக்கள் ஸ்ரீதர், இளங் ஆகியோர் பார்வையிட்டனர். 

அப்போது அங்கி ருந்த பொதுமக்களிடம் முகக்கவசம், சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

ஏற்பாடுகளை சுகாதார குழுவினருடன் இணைந்து கிராம உதவியாளர் கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.