ஆற்காடு அருகே பேப்பர் லோடு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் டிரைவர் படுகாயமடைந்தார்.
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் சிவராஜ் ( 34 ) . இவர் அதே ஊரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் லாரி டிரைவராக வேலை செய்து வருகி றார். இவர் கடந்த 19 ம் தேதி இரவு காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத் திலிருந்து பிரவுன் ஷீட் பேப்பர் லோடு ஏற்றிக் கொண்டு பெங்களூர் நோக்கி சென்றார். 

ஆற்காடு அடுத்த பாப்பேரி அருகே வந்த போது மழை பெய்து கொண்டிருந்த தால் திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. இதில் லாரிடிரைவர் சிவராஜ் படுகாயமடைந்தார். 

மேலும் லாரியில் இருந்த பேப்பர் ரோல்கள் கீழே சிதறின . இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர் .