ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவில் வளாகத்தை அலங்கரித்த எலக்ட்ரீசியன், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


வின்டர்பேட்டை பகுதியில் உள்ள கோவிலில், அகிலன் என்பவர் அலங்கார வேலைகளில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, உயர்மின் கம்பியில் இருந்து அகிலனின் உடலில் மின்சாரம் பாய்ந்ததால் அவர் உயிரிழந்தார். 

அரக்கோணம் மருத்துவமனையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக அரக்கோணம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.