தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை பெரிதும் தணிந்திருக்கிறது. தினசரி தொற்று 1,600க்கும் கீழ் சரிந்துள்ளது.  தொடர்ந்து தமிழக அரசு மாநில அளவிலான பொதுவான கட்டுப்பாடுகளையும் தளர்வுகளையும் அவ்வப்போது அமல்படுத்தி வருகிறது.  

இந்நிலையில் கொரோனா பரவல் குறித்தும், தமிழகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். 

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அதில், ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழிபாட்டுத் தலங்களில் வார இறுதி நாட்களில் அனுமதி அளிப்பது பற்றி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்.