ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பூபதி நகர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 45). ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி நளினி (40) ஆற்காட்டில் உள்ள அரசு நிதி உதவி பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு ராதாகிருஷ்ணன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தபோது படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.