ஆற்காடு அடுத்த சாத்தூரை சேர்ந்தவர் தாமோதரன்( 70 ) , விவசாயி. இவர் சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனது நிலத்திற்கு சென்ற அவர் அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்த புகாரின்பேரில் ஆற்காடு தாலுகா இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் வழக்குப்பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர் .