அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் அண்டை மாவட்டமான திருப்பத்தூரில் பெய்து வரும் தொடர் மழையினால் வேலூரை அடுத்த செதுவாலை அருகே உள்ள விரிஞ்சிபுரம் பாலாறு தரைப்பாலம் வழியாக நீர் ஆர்பரித்து ஓட துவங்கியுள்ளது. தொடர் மழையினால் வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைகளும் நிரம்பி விட்டன. மேலும் சில ஏரி, குளங்களும் முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது.