ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும், ஆந்திராவில் பெய்த பலத்த மழையால் சித்தூர் கலவ குண்டா அணை நிரம்பியது. 
இதனால், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலாற்றில் வெள்ளம் ஓடுகிறது.

இந்நிலையில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. 

அரக்கோணத்தில் அதிக பட்சமாக 19.4மி.மீட்டர் மழை பெய்தது.
நெமிலியில் 7 மி.மீட்டர், 
வாலாஜாவில் 1.3மி.மீட்டர், 
அம்மூரில் 15மி.மீட்டர், 
சோளிங்கரில் 9மி.மீட்டர். 
கலவையில் 7.2மி.மீட்டர் என ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மொத்த மழையளவு 58.9 மி.மீட்டர் ஆகும்.