அரக்கோணம் அடுத்த கிழக்கு தர்மராஜா கோவில் தெரு பகுதியில் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக பாசறை தலைவரும் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி அவர்களின் நேர்முக உதவியாளர் மான ஷாம் குமார் என்பவர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஷியாம் குமார் வீட்டின் முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை கண்டித்து அப்பகுதி அதிமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் திமுக அரசு பழிவாங்கும் நோக்கத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்"