காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் காரீப் பருவத்தில் வாழை பயிரிட்ட விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் பாதுகாப்பு திட்டத்தில், சேர்ந்து பயனடைய வேண்டும் என்று தோட்டக்கலை உதவி இயக்குனர் பசுபதிராஜ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து, அவர் வெளியட்டுள்ள செய்திக் குறிப்பல் கூறியதாவது:

காரீப்பருவத்தில் வாழை பயிரிட்ட விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் பாதுகாப்பு திட்டத்தில் சேர தேவையான ஆவணங்கள் பட்டா அல்லது சிட்டா, அடங்கல், வங்கிகணக்கு புத்தகம், ஆதார், உள்ளிட்டவகளின் நகல். காப்பீடு தொகை ஏக்கருக்கு 52,100, ஆனால் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய பிரிமியம் 12,605 ஆகும். 

இத்திட்டத்தில் விவசாயிகள் மொத்த காப்பீடு தொகையில் 5 சதவிதம் மட்டும் செலுத்தினால் போதுமானது. மீதமுள்ள பிரிமிய தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் செலுத்தும். விவசாயிகள் பிரிமிய தொகையை செலுத்த வரும் 15 ம் தேதி கடைசிநாளாகும். இந்த காப்பீடு திட்டத்தில் அங்கிகரிக்கப்பட்ட கிராமங்கள் காவேரிப்பாக்கம், சேரி, கட்டளை, உள்ளிட்டபகுதிகளாகும். 

எனவே விவசாயிகள் தங்கள் பயிர்களை இன்றே காப்பீடு செய்துகொள்ள தோட்டக்கலை உதவி அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது .