மனி ஹெய்ஸ்ட்’ (Money Heist )தொடரின் வெளியீட்டை முன்னிட்டுத் தனது ஊழியர்களுக்கு ராஜஸ்தானில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனம் விடுமுறை அளித்துள்ளது 

நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற ஸ்பானிஷ் தொடர் ‘மனி ஹெய்ஸ்ட்’.  இத்தொடரின் நான்காவது சீஸன் இந்த ஆண்டு வெளியாகி பெரும் ஹிட்டடித்தது. இத்தொடரின் 5-ம் சீசன் வரும் செப்டம்பர் 3-ம் தேதி அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த VerveLogic என்ற மென்பொருள் நிறுவனம் செப்டம்பர் 3-ம் தேதி ‘மனி ஹெய்ஸ்ட் வெளியீட்டை முன்னிட்டு 'நெட்ஃப்ளிக்ஸ் அண்ட் சில்' என்ற பெயரில் விடுமுறை அளித்துள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.