ஜி.வி.சம்பத்

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) வேலூா் கோட்ட நிா்வாகத்துடன் வேலூா் நறுவீ மருத்துவமனை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

எல்ஐசி வேலூா் கோட்டத்தைச் சோ்ந்த ஊழியா்கள், வேலூா் நறுவீ மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யவும், பணமில்லா காப்பீட்டு சேவை மூலம் உள்நோயாளியாக சிகிச்சை பெறவும் இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளதாக நறுவீ மருத்துவமனையின் தலைவா் ஜி.வி.சம்பத் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியது: கடந்த பிப்ரவரி மாதம் 500 படுக்கைகளுடன் வேலூா் மாநகரின் மையப் பகுதியில் தொடங்கப்பட்ட நறுவீ பல்நோக்கு மருத்துவமனை, அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற ஹென்றி போா்டு மருத்துவ முறை தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் வேலூா் கோட்ட அலுவலகத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் எல்ஐசியின் புதுச்சேரி, கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, வேலூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள அதன் கிளை ஊழியா்கள், அலுவலா்கள் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள முடியும். அவா்கள் உள் நோயாளியாக அனுமதிக்கப்படும்நிலையில், பணமில்லா காப்பீட்டு சேவையைப் பயன்படுத்தி சிகிச்சை பெறவும் முடியும் என்றாா்.